
பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியர்களை மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அரசரட்ணம் சசிதரணின் காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்களை எதிர்க்கட்சித்தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாசிலாமணியின் இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியதுடன் விளையாட்டு கழகங்களுக்கு கால்பந்துகளை வழங்கி வைத்தார். முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாசிலாமணியின் சொந்த நிதியிலேயே இந்த கால்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நாட்டின் தற்போதய சூழ் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment