காத்தான்குடி: தற்காலத்தில் நவீன விடயங்களை அல்லாஹ்வின் உதவியினால் மிக சிறப்பாக எடுத்துரைக்கும் தென் இந்தியா, சென்னையைச் சேர்ந்த இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
இன்றைய தினம் ஜாமியுள்ளாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் குத்பா பயானை நிகழ்த்திய இவர் தற்போது (இஷா தொழுகையினைத் தொடர்ந்து) காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ‘நம் ஸஹாபாக்களின் வீரத்தியாகமும் இன்றைய எமது சமூகம் நாளைய முஸ்லீம்களின் வெற்றியை நோக்கியதா?’ மார்க்க சொற்பொழிவை நிகழ்த்துகின்றார்.
இந் நிகழ்வினை கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் CARE & SHARE ORGANIZATION அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயானைக் கேட்பதற்காக பல நூற்றுக்கணக்கணக்கான மக்கள் கூட்டம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment