லஜ்னதுஸ் ஸுன்னாவின் மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு

YOURKATTANKUDY
YOURKATTANKUDY

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை 29.03.2013 பிற்பகல் 04.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மௌலவி பஷீர் (மதனி)தலைமையில் நடைபெற்றது.

இம்மாபெரும் இஸ்லாமிய பெண்கள் கருத்தரங்கில் ‘மேற்கத்தியத்திற்கும் இஸ்லாத்திற்கும் மத்தியில் பெண் உரிமை” எனும் தலைப்பில் மௌலவி ஏ.ஜீ.எம்.ஜலீல்(மதனி) ‘நவீன உலகில் முன்மாதிரி முஸ்லிம் பெண்” எனும் தலைப்பில் மௌலவி றிஸ்வான்(மதனி),’மறைந்திருந்து எமது உம்மத்தை கருவருக்கும் தொற்றா நோய்கள்” எனும் தலைப்பில் காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் ஆகிய அதிதிகள் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.

இக்கருத்தரங்கில் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவின் தலைவர் மௌலவி றிஸ்வான்(மதனி),மௌலவி எஸ்.எம்.பிம்.அன்சார் (மதனி),எம்.அன்சார்(மதனி),ஜலீல் (மதனி),செங்கலடி பிரதேச சபை மோட்டார் போக்குவரத்துப் பிரவுப் பொறுப்பாளர் மௌலவி ஸாபிர்(மதனி), காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.அன்சார்(மக்கீ) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் காணொளி விவரணத்துடன் சிற்ப்பாக விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment