பொரலஸ்கமுவ பெபிலியானவில் ‘பெஷன் பக்’ மீது குண்டர்கள் கும்பல் தாக்குதல்!

Fashion Bug

விசேட செய்தியாளர் 

கொழும்பு: பொரலஸ்கமுவ பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (FASHION BUG) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது வியாழன் இரவு  7.45 மணியளவில் குண்டர்கள் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட  குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் அறியமுடிகின்றது. இந்த தாக்குதல் காரணமாக களஞ்சிய கட்டடம் உட்பட ஏனைய சொத்துக்கள் மற்றும்  ‘பெஷன் பக்’ (FASHION BUG) இக்கு சொந்தமான ஒரு வாகனம் என்பன சேதத்துக்கு உள்ளானது.

பின்னர் இராணுவம், விஷேட அதிரடிப்படை மற்றும் கலகமடக்கும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Published by

Leave a comment