புத்தர் இலங்கையில் பிறக்கவில்லையாம்!

flag-www.kaputa.com_large[1]நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் பௌத்த அமைப்புக்குள் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வருடம் முதல் இலங்கை முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பொது பல சேனாவின் நடவக்கைக்கையைத் தொடர்ந்து, சிங்கள மத பிரமுகர்களுக்கிடையிலும் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலும் உட்பூசல்கள் வெளிக்கிளம்பி வருகின்றன.
இவை இப்படி இருக்கையில் இன்று கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை என ரத்மலானை தர்ம ஆய்வு மையத்தின் பணிப்பாளர் நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

கௌத புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார்.

கௌதம புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை. அதனால் பௌத்த மத வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உடுவே தம்மாலோக தேரரின் இந்தக் கருத்து குறித்து பகிரங்க விவாதம் நடாத்தத் தயார் என நாகொட விபஸ்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment