– விசேட நிருபர்.
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம். அலிசப்ரி .JP இன்று மாலை காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி பரீட் நகர் பள்ளிவாயல் சந்தியில் வைத்து கல், மண் ஏற்றி தொழில் புரியும் சிபான் என்பவர் தனக்கு தகாத வார்த்தைகளால் ஏசி தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
மேலும் அவா் தெரிவிக்கையில் ” இன்று பிற்பகல் 05.00 மணியளவில் எனக்கு தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது. அழைப்புடன் தொடா்பு கொண்ட போது வடிகாண் அபிவிருத்திப் பணிக்காக தோண்டப்பட்ட மண்ணை அவசர அவசரமாக டெக்டா் மெசினில் அள்ளிக் கொண்டு செல்வதாக என்னிடம் தெரிவித்தார். நான் மேற்படி இடத்துக்குச் சென்ற போது மக்கள் பலா் அங்கு கூடி நின்றனர் தோண்டப்பட்ட மண்ணைக் காணவில்லை.
மேற்படி காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதியில் வடிகால் அபிவிருத்திப் பணிகள் மிக அவசரமாக நடை பெற்று வரும் நிலையில் வீதிகள் தோண்டப்பட்டு அதிலிருந்து மிகக் கூடுதலான மணல் வருவதனால் அதனையே மேற்படி சிபான் என்பவா் அனுமதியின்றி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
இவ்வாறு தோண்டப்படும் மணலை எடுத்து புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ மஸ்ஜித், பெரிய ஜூம்ஆ மஸ்ஜித் என்பவற்றுக்கு மேட்டு நில மையவாடி அமைப்பதற்கு நானும், சகோதரா் பாக்கீர் சேரும் உத்தேசித்துள்ளோம். எனவே தான் நான் மேற்படி மணலை அகற்றக் கூடாது என்று சொன்னேன் அப்போதுதான் சிபான் என்னுடன் பிரச்சினைக்கு வந்தார்.”
வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள அலிசப்ரியை நலம் விசாரிக்க சியாட், சபீல் நழீமி, ஜெஸீம், பரீட் , றஹீம், அரபாத் ஆகியோர்கள் சென்றிருந்தனர்.
Leave a comment