கிழக்குப் பாடசாலைகளில் பரீட்சைகள் 2 தினங்களுக்கு ஒத்திவைப்பு!

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு!

schoolதேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கிழக்கு மாகாண மாணவர்கள் பங்குபற்றுவதற்கு வசதியாக இம்மாகாண பாடசாலைகளில் இடம் பெற்று வரும் தவணைப் பரீட்சைகள் யாவும் இன்று 27 ஆம் திகதியும் நாளை 28ஆம் திகதியும் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.

மேற்படி இருதினங்களுக்குமான பரீட்சைகள் அடுத்த வாரம் இடம்பெறுமெனவும் அதற்கேற்ற வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் அதிபர்களையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் கேட்டள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மாணவர்களின் அறிவை பெருக்கும் வகையிலும், புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை கட்டாயம் மாணவர்கள் பார்வையிட வேண்டுமென மாகாண முதலமைச்சரும் மாகாண ஆளுநரும் மாகாண கல்வி அமைச்சரும் சகல பாடசாலை அதிபர்களையும் வேண்டிக்கொள்ளுமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய குறித்த இரு தினங்களிலும் பாடசாலையில் இடம்பெறும் சகல நிகழ்வுகளையும் இடைநிறுத்தி கண்காட்சியை பார்வையிட மாணவர்களுக்கு வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் போக்குவரத்து வசதியற்ற பாடசாலைகளுக்கு போக்குவரத்து வசதிகளை இராணுவ அதிகாரிகள் வழங்குவர் எனவும் அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

Published by

Leave a comment