– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ‘ஏழை மக்களின் வளமான வாழ்விற்கு வழிகோலுவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கணவனை இழந்த விதவைகளுக்கு இலவசமாக குளாய்க் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி பஸ் டிப்போவுக்குள் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மஸ்ஊத் (ஹாஸிமி) தெரிவித்தார்.
குறித்த அமைப்பு சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல், ஏழை மக்களின் வளமான வாழ்விற்கு வழிகோலுவோம் உள்ளிட்ட பல்வேரு சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment