ஓர் சிறப்புக் கண்ணோட்டம்
இலங்கை: இலங்கை கிரிக்கட் வீரர்களின் புகழ் மற்றும் அவர்களது திறமையான ஆட்டம் போன்றவற்றின் காரணமாக இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரபல்யமான உள்ளுர் போட்டிகளில் விளையாட அந்நாடுகள் இலங்கை வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.
உலக அளவில் இன்று புகழ்பெற்ற இருபது 20 போட்டித்தொடராகக் கருதப்படும் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள், ஐ.பி.எல். ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சிறப்பாக விளையாடி தங்களது கழகங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றது மாத்திரமல்லாது, இந்திய கிரிக்கட் இரசிகர்களின் உள்ளங்களிலும் தனி இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.
இவ்வருடத்துக்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாக இருக்கும் இந்நிலையில், இலங்கை வீரர்களை தமிழ் நாட்டில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என விளையாட்டை மறந்து அரசியல் நாடகம் அல்லது ஓர் போராட்டம் இன்று தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ஐ.சி.சி நடுவராகக் கடடைபுரிந்த இலங்கை முன்னாள் வீரர் குமார் தர்மசேனா விமர்சனத்துக்கு உள்ளானது மாத்திரமன்றி, அவரை தமிழ் நாட்டிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு அரசியல் போராட்டம் தமிழ் நாட்டில் ஏவப்பட்டிருந்தது.
அன்று முதல் இன்றுவரை அண்ணன்-தம்பி போன்ற இணைப்பை பெற்றிருக்கும் பௌதீக, கலாச்சார பிணைப்புக்களால் ஒ;னறிணைந்த இலங்கை-இந்தியா ஆகிய இரு நாடுகிளனது ஒற்றுமை குறுகிய மனப்பான்மை கொண்ட சில காடைத்தன அரசியல் கும்பல்களால் இன்று ஓர் கிரிக்கட்டிற்கு கலங்கம் ஏற்பட்டிருக்கின்றது.
தீவிர வாதிகள் என்றும், பரோம விரோதிகள் என்றும் பாகிஸ்தானை எப்போதும் கருதும் இந்திய மக்கள், பாகிஸ்தானை தங்களது மண்ணில் விளையாட அனுமதித்திருந்ததானது இந்தியாவின் நல்லெண்ணதையும், இரு நாடுகளுக்கிடையிலுமான பரஸ்பர உறவுகளையும் வலு சேர்க்கும் பாலமாகவும் அமைந்திருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தில் இலங்கைத் தமிழர்கள், இலங்கை சிங்களவர்கள், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் இந்திய இராணுவத்தினர் என பல இலட்சம் உயிர்கள் இலங்கையில் காவுகொல்லப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் பாதிக்கப்பட்ட இணமாக மூன்று இணங்களும் இருக்கையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு பகுதிகள் அரச-அரச சார்பற்ற நிறுவனங்களால் இன்று அப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் எஞ்சியிருப்பது அரசியல் தீர்வு ஒன்றே! இத்தீர்வானது இலங்கைத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை முஸ்லீம்கள், இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் என நிதானமாக முன்னெடுக்க வேண்டியிருக்கின்ற விடயம்.
இலங்கையின் அரசியல் விடயங்களை இலங்கை அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு அரசியல் தலைவர்ளும் ஒன்று சேர்ந்து அதற்கான விடயத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
கிரிக்கட் ஓர் விளையாட்டு! விளையாட்டுடன் அரசியலைக் கலந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன்று குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் நாட்டு போராட்டக்காரர்களையோ, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளையோ திருத்த முடியாத நிலையிலும், அவர்களுக்கு இலங்கையின் தற்கால நிலைமையை புரிந்து கொள்ளத்தக்க மனோபாவம் இல்லாத நிலையிலும் இன்று இலங்கை கிரிக்கட் வீரர்கள் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மாத்திரமன்றி தமிழ் நாட்டில் அவர்கள் காலடி வைப்பதற்குக் கூட முடியாத நிலை தோன்றி இருக்கின்றது.
பாகிஸ்தான் வீரர்களையும் இவ்வாறே விமர்சித்த இந்திய அரசியல் பிரதிநிதிகள், பாகிஸ்தான் வீரர்களை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில்லை. இவ்வாறு இருந்தும், பாகிஸ்தான் இருபது20 போட்டிகளில் தனக்கான ஓர் தனி இடத்தைப் பிடித்திருப்பதும், உலகக் கிண்ண இருபது 20 தொடர் வரலாற்றில் பல சரித்திரங்கள் படைத்திருப்பதும் நாங்களும் சளைத்தவர்களல்லர் என்பதை பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் இந்தியாவுக்குச் சவாலாக சரித்திரம் படைத்து வருகின்றனர்.
இலங்கை மக்கள் தாய் நாட்டுப்பற்றை கிரிக்கட்டிற்று வழங்குகின்றார்களா? இல்லையா? என்பதை விமர்சிப்பதற்கு முன்னர் இலங்கை கிரிக்கட் வீரர்கள் தாய்றாட்டை நேசிக்கின்றார்களா? என நோக்க வேண்டும்.
பல மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தமாகிச் செல்லும் இலங்கை வீரர்களுக்கு ஐ.பி.எல். இல் கிடைக்கும் சுகபோக வாழ்க்கைக்கு நிகர் ஒன்றும் இல்லை!
இலங்கை கிரிக்கட்டில் தனது ஆயுளை அர்ப்பணித்தாலும் இவ்வாரான சம்பாத்தியத்தை இலங்கை கிரிக்கட் வீரர்கள் பெறமுடியாது. இலங்கையின் மனதி உரிமை மீறல்களுக்காக ஐ.நா. சபையால் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் தீர்மானங்களுக்கு கடந்த இருமுறையும் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திந்தது.
எனவே இங்கு நாட்டுப்பற்றா? சுகபோகமா? எனும் இரு கேள்விகளுக்கிடையில் இலங்கை வீரர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.
இதைவிட தமிழ் நாட்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான எதிரிப்புக்கு மத்தியிலும் ஐ.பி.எல். போட்டிகளில் தங்களை அர்ப்பணிக்கத் தயார் என இலங்கை வீரர்கள் விளையாடினால் தாய் நாட்டுக்குச் செய்யும் ஓர் துரோகமாகக் கருதப்படும். மாறாக இந்தியா என்னதான் இலங்கைக்கு எதிராக அரசியல் செயற்பாடுகளை முன்வைத்தாலும் எங்களுக்கு அதில் அக்கறை இல்லை. நாங்கள் கிரிக்கட்டை நேசிக்கிறோம். அதனால் எதிர்ப்புக்கள், கண்டணங்களுக்கு மத்தியிலும் நாங்கள் விளையாடுவோம் என்பதாகவே இலங்கை கிரிக்கட் வீரர்களின் மனோநிலை இருக்கின்றன.
இதற்கிடையில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் பொது பல சேனா இந்தியாவில் தங்களது வீரர்களை அனுப்ப பொது பல சேனா இது பற்றி எவ்வித கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் ஆச்சரியமானதே!
அன்று இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தாக்கம் இருந்த காரணத்தினால் 1986ல் இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளாமல், இவ் ஆசியக் கிண்ணத் தொடரை பகிஸ்கரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. (MJ)
![_66629152_sri[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/66629152_sri1.jpg?w=210&h=118)
![_66629152_sri[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/66629152_sri1.jpg?w=300&h=168)
![bce1c8406efda667623ad8b210209583_XL[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/bce1c8406efda667623ad8b210209583_xl1.jpg?w=300&h=201)
![Lasith-Malinga[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/lasith-malinga1.jpg?w=250&h=300)
Leave a comment