211 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்

graduate[1]அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 211 பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களும், காணி உறுதிப்பத்திரமற்ற 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரமும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியையிட்டு அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பிரதான கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இரு வெவ்வேறு நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களி னால் நியமனங்களும் காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப் பட்டன.

ஒரு வருட கால பயிற்சிகளை முடித்துக் கொண்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 211 பயிலுநர் பட்டதாரிகளுக்கே நேற்றைய தினம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், அபிவிருத்தி உதவி உத்தியோகத்தர்களாக அரச துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 211 பட்டதாரிகளில் 115 சிங்களவர்களும், 46 தமிழர்களும், 10 முஸ்லிம்களும் அடங்குவர். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பியசேன, ஸ்ரீயானி விஜேவிக்ரம, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், ஜனாதிபதி செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-தினகரன்

Published by

Leave a comment