
-பழுளுல்லாஹ் பர்ஹான்
‘முஸ்லிம் மக்களை குழப்புவதற்காக சில நாசகார சக்திகள் எமது கருத்துக்களை திரிபுபடுத்துகின்றனர்’ என அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபையின் பொறுப்பாளர் மௌலவி எம்.எம்.இர்பான் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு 2013.03.23 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது.
அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்
இலங்கை பாராளுமன்றத்தில் 51வது இலக்கத்தில் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபை சுமார் 13வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றது.
ஹலால் சாண்றிதழ் வழங்குதல் தொடர்பில் 2006ம் ஆண்டு ஜம்மியதுல் உலமாவின் அங்கீகாரம் பெற்று வழங்கப்பட வேண்டும் என இலங்கை பாராளுமன்றத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
பின்னர் 2007ல் மீண்டும் ஜம்மியதுல் உலமாவிடம் அங்கீகாரம் பெறத் தேவையில்லை என பாராளுமன்றம் அறிவித்தது.
இதுவரையில் அதுதான் சட்டத்தில் இருக்கின்றது.இந்த நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் ஹலால் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஹலால் பிரிவு இறுதியான தீரக்;;கமாக முடிவு என்பதை பொதுமக்களுக்கு சொல்லுதல் அவசியம்.
இறுதியாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கடைசி முடிவு எடுப்பதில் ஈடுபட்டது.
கடுமையான சிக்கல்களுக்கு மத்தியில் பிரதானமாக மூன்று தீர்வுகளை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா முன்வைத்தது.
‘ஹலால் சாண்றிதழ் பற்றிய பூரண தெளிவு பொது மக்களிடம் இருக்க வேண்டும்’ ‘முஸ்லிம் மக்கள் ஹலாலை மாத்திரம்தான் உபயோகிக் வேண்டும்’ ‘ஹலால் சாண்றிதழ் பொறிமுறையை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்கோள் விடுத்தல்’ போன்ற முடிவுகளை எடுத்தோம்.
அரசாங்கம் ஹலால் சாண்றிதழ் பொறிமுறையை அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை.
இறுதியாகத்தான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உறுப்பினர்கள்இகல்விமான்கள்இட்டத்தரணிகள்இமுக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒன்ரு சேர்ந்து கடைசி இரண்டு தீர்மாணங்களை எடுத்தோம்.
‘ஹலால் சாண்றிதழ் தொடர்பில் பரிசீலனை உள்ளிட்ட சகல அம்சங்களையும் ஜம்மியதுல் உலமா மேற்கொள்ளும்.ஆனால் ஹலால் முத்திரை உள்நாட்டிற்குள் பொறிக்கப்படுவது கட்டாயமில்லை'(விரும்பினால் பொறிக்கலாம் இல்லையென்றால் விட்டு விடலாம்) ‘ஹலால் சாண்றிதழ் இலவசமாக வழங்கப்படும்’ இந்த இரண்டு தீர்மாணங்களும்தான் இருதியாக எடுக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க மக்களை குழப்புவதற்காக உள்நாட்டில் ஹலால் தேவையில்லை.வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மாத்திரம் ஹலால் பொறிமுறை என ஜம்மியதுல் உலமா முடிவு எடுத்துள்ளது என தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பல போலியான சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன. ‘ஏன் அ.இ.ஜ.உ வின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகின்றது?’ ‘ஏன் ஏற்றுமதிக்கு மாத்திரம் ஹலால் பொறிமுறை?’ ‘ஏன் ஹலால் சாண்றிதழை ஆரம்பத்திலிருந்தே இலவசமாக வழங்கவில்லை?’ ‘ஹலால் முத்திரை இல்லாமல் பொருட்களில் ஹலால் ஹறாம் பார்ப்பது எவ்வாறு?’ போன்ற பல்வேரு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு அதற்கு தெளிவான சான்றுகளின் மூலம் பதில்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக தெளிவுகளைப் பெற விரும்புவோர் எமது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களான 0117425225, 08117451355 அல்லது www.halaalsrilanka.com எனும் இணையத்தள முகவரியின் ஊடாகவோ அல்லது acjuinfo@halaalsrilanka.com எனும் மின்னஞ்சல் முகவரினூடாக தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஹலால் தொடர்பில் வெளிவரும் எந்தவொரு குருந்தகவலையும் உறுதிப்படுத்தாது நம்ப வேண்டாம்.
எமது உத்தியோபூர்வ இலவச டுவிட்டர் சேவையான Follow ACJUHALAALSL என டைப்செய்து 40404 என்ற இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ் செய்து உமது தொலைபேசியில் தகவல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
அது மாத்திரமல்ல. அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கெதிராக பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.’ஹலால் முத்திரை என்பது nளிநாடுகளில் நடைமுறையில் இல்லை’ உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
சர்வதேச ரீதியில் எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்தான், கட்டார், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஹலால் முத்திரை பொறிமுறை நடைமுறையில் உள்ளது.
இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் ஹலால் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. பெரும்பான்மையான மாற்றுமத சகோதரர்களுடைய ஊடகங்களும் எமக்கு அனுமதி தரவில்லை.
மாற்றமாக சில ஊடகங்கள் எமது கருத்தையும் முடிவையும் வித்தியாசமாக சித்தரித்து மக்களுக்கு காட்டினார்கள். உண்மை மறைக்கப்பட்டது.
எனவே முஸ்லிம்கள் ஒரு போதும் குழம்பி விடாமல் உண்மையை விசாரித்து ஹலால் தொடர்பில் பூரண தெளிவைப் பெற்றுக்கொள்ளுமாரு நான் கேட்டுக் கொள்கின்றேன் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபையின் பொறுப்பாளர் மௌலவி எம்.எம். இர்பான் தெரிவித்தார்.
Leave a comment