– பஹ்மியூஸூப்

திருகோணமலை: திருகோணமலை அல்மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் ஜீ.டீ. இக்பால் தலைமையில் பாடசாலை மைதானத்தில் பலத்த வளப்பற்றாக்குறைக்கு மத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் திருமதி டபில்யூ. ஜீ.எம். ஆரியவதி கலப்பதி பிரதம விருந்தினராகவும், கௌரவ விருந்தினராக திருகோணமலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் என். யாக்கூப் ஜான் (உடற்கல்வி), சிறப்பு விருந்தினர்களாக பூம்புகார் கிராம உத்தியோகத்தர் எஸ்.சிறிகணேசலிங்கம், திருகோணமலை நகர பொது சுகாதார பரிசோதகர் ஏ.அமலராஜ் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இல்ல மாணவர்களின் விளையாட்டு போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி நிழகழ்ச்சிகள் என்பன நடைபெற்றது. வெற்றிபெற்ற இல்லங்கள் மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன. அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment