
காத்தான்குடி: தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வழங்கிவைக்கபட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம், காத்தான்குடி தள வைத்தியசாலை உதவி அத்தியட்சகர் டாக்டர் ஆர்.எம். ஆதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஹிறா பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் குறைஷ் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டி காத்தான்குடி தள வைத்தியசாலை உதவி அத்தியட்சகர் டாக்டர் ஆர்.எம். ஆதிலிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
Leave a comment