![images[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/images1.jpg?w=150&h=116)
பிரித்தானியா: பிரித்தானியாவின் நேரக்காட்டி (கலண்டர்) காலத்தின்படி தற்பொழுது இலைதுளிர் காலம் (Spring) ஆரம்பித்திருக்கின்றது. கடந்த 3 மாதங்கள் உறைபனியில் மோசமான காலநிலையைச் சந்தித்து வெயிலுக்காக் காத்திருக்கும் இந்த மார்ச் மாத முடிவிலும் அங்கு வெயில் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். கடுமையான குளிரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
குளிர்காலங்களை விடவும் மோசமான குளிர் நிலவுவதுடன் உறைபனிகளும் பல பாகங்களிலும் பெய்து வருகின்றன. இதன் காரணமாக விமானப் போக்குவரத்துக்கள், ரயில் மற்றும் தரைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளும் சென்றவாரம் மூடப்பட்டிருந்தன.
பலத்த காற்று வீசுவதுடன், தொடர் மழையும், வெள்ளப் பெருக்கும் வடக்கு இங்கிலாந்தில் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 50 வருட காலத்துள் ஏற்பட்டுள்ள மிக மோசமான காலநிலை இதுவாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a comment