– விசேட நிருபர்
காத்தான்குடி: இன்று திங்கட்கிழமை இலங்கை முஸ்லீம்களால் ஒன்றிணைந்து, பொது பல சேனா மற்றும் இவ் இயக்கத்தை ஊக்குவிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால்-கடையடைப்பு சிறப்பாக வெற்றியடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நேற்றிலிருந்து ஒவ்வொரு ஊர் அரசியல் பிரதிநிதிகளும் அவ்வூர் பொதுமக்களிடம் இன்றைய ஹர்த்தாலை பகிஸ்கரித்து, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு விடுவிக்க்கப்பட்ட வேண்டுகோளை மக்கள் புறக்கணித்து, முஸ்லிம்களின் ஒற்றுமையை இலங்கையில் இன்று நிலைநாட்டி இருக்கின்றனர்.
கிழக்கிலும் நாட்டின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்றைய ஹர்த்தால் முழு வெற்றி (Full Success) அடைந்திருக்கின்றது.
இது பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்…

Leave a comment