FM. பர்ஹான்
காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீன்.BA/JP வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட மூன்று அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக்கடிதமும் மூன்று மட்டக்களப்பு நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின்; மக்கள் தொடர்பு அதிகாரியின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது அகில இலங்கை சமாதான நீதவான்களாக நியமனம் பெற்ற புதிய காத்தான்குடி முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் கே.எல்.எம்.றஹீம், எம்.ஜ.பத்ஹூல் கரீம், அல் மனார் இஸ்லாமிய அறிவியல் கல்லூரியின் அறபு மொழி விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி), மற்றும் மட்டக்களப்பு நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்களான காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலய ஆசிரியர் எம்.ஏ.சி.எம்.ஜஹானி,கர்பலா அல் மனார் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.இர்சாத், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் மேர்பார்வையாளர் எம்.எஸ்.எம்.றிஸ்வி ஆகியோர் அகில இலங்கை மற்றும் மட்டக்களப்பு நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்களை உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்.எம்.என். மூபீனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.ரம்ளான், மூபீன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் லத்தீப் ஹாஜியார்,அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் யாஸிர் அறபாத், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இணைப்பாளர் தௌபீக் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.







Leave a comment