மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்களின் இலங்கை விஜயம்

lடீன் பைரூஸ்/மசூத்அஹமட்(ஹாஸிமி) 

இந்தியாவின் பிரபல மாரக்கச்  சொற் பொழிவாளர் மௌலவி. அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்கள்  தனது இலங்கைக்கான விஜயம்  ஒன்றினை மேற் கொள்ள உள்ளார்கள். அன்னாரின் இலங்கைக்கான விஜயம் இலங்கை வாழ் சகல இன மக்களுக்கும் மிகவும் பிரயோசனமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

மௌலவி. அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்கள் எதிர் வரும் 29.03.2013  வெள்ளிக்கிழமை காத்தான்குடி மண்ணுக்கு விஜயம் செய்யவுள்ளார்கள். அன்றைய தினம் “அல்லாஹ்வின் சோனையின் போது முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை” எனும் தலைப்பினில் காத்தான்குடி 05  ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலில்  ஜூம்ஆ  பிரசங்கம்  நிகழ்த்த உள்ளார்கள்.

29.03.2013 வெள்ளிக்கிழமை   இஷாத் தொழுகையினைத் தொடா்ந்து  “நம்  ஸஹாபாக்களின் வீரத்தியாகமும் இன்றைய எமது  சமூகமும் நாளைய முஸ்லிம்களின் வெற்றியை நோக்கியதா”…?  எனும் தலைப்பினில் காத்தான்குடி 03 மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில்  சொற்பொழிவாற்ற  உள்ளார்கள்.

மேற்படி நிகழ்வினில் அன்பு பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.pho

Published by

Leave a comment