
பழுலுல்லாஹ் பர்ஹான்
புதிய காத்தான்குடி மத்ரஸதுல் அப்றார் குர் ஆன் மத்ரசாவின் 2010, 2011, 2012 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் மண்டபத்தில் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம். ஐ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் மற்றும் கௌரவ அதிதிகளான காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அலியார் (பலாஹி),முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஏ. எல். ஜூனைட் நளீமி, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம். பி. எம். பாஹிம் பலாஹி, மஃஹதுஸ் ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லுரியின் அதிபர் மௌலவி ஸைனுலாப்தீன் மதனி காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி ரிஸ்வான் மதனி, அதன் செயலாளர் மௌலவி ஜிப்ரி மதனி, மஃஹதுஸ் ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லுரி ஆசிரியர் ஸாபீர் மதனி மற்றும் அதிதிகளினால் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் விருதும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம். பி. எம். பாஹிம் பலாஹியினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
Leave a comment