காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் 2013ம் வருட ஸகாத் உதவிகள் வழங்கும் நிகழ்வில் 95 பேருக்கு ஸகாத் உதவிகள்

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் காத்தான்குடி மற்றும் பாலமுனை, காங்கேயனோடை, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை மற்றும் அதனை அன்டியுள்ள அயல் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் கடன், சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கான 2013ம் வருட ஸகாத் உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஸ்ஸஹீத் அல்ஹாஜ் ஏ அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவிஏ. எம். அலியார் றியாதி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 2013ம் வருட ஸகாத் உதவிகள் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அலியார் (பலாஹி), சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவிஏ.எம்.அலியார் றியாதி மற்றும் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களான காலிதீன் ஹாஜி, எம். ஐ. எம். முஹைதீன் ஹாஜி ஆகியோரினால் வழங்கிவைக்கபட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லுரியின் சிரேஸ்ட விரிவுரையாளரும் கவிஞருமான கவிமனி மௌலவி எம். எச். எம். புகாரி (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸாதிகீன் ஹாஜி, மஃஹதுஸ் ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லுரியின் அதிபர் மௌலவி ஸைனுலாப்தீன் மதனி காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி ரிஸ்வான் மதனி, அதன் செயலாளர் மௌலவி ஜிப்ரி மதனி, மற்றம் உலமாக்கள், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

இங்கு மூன்று விதமான சகாத் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதானவும் அதில் வாழ்வாதார உதவியாக தலா பத்தாயிரம் 10000 ரூபா 28 பேருக்கும் கடன் நிவாரண உதவியாக 15000 ரூபா வீதம் 21 பேருக்கும் தொழில் உதவியாக 2 பேருக்கு துவிச்சக்கர வண்டியும் 7400 ரூபாவும், 3 பேருக்கு துவிச்சக்கர வண்டியும் 12400 ரூபாவும், மா அரைக்கும் இயந்திரம் 4பேருக்கும், சாதாரண தையல் இயந்திரம் 3பேருக்கும், டிஸைன் போடும் சிக் செக் தையல் இயந்திரம் 6 பேருக்கும் 15000, 20000, 25000 ரூபா தொகைகளில் 28 பேருக்கும் 2013ம் வருட ஸகாத் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் இணைப்பாளர் என். எம். என். றம்ஸீன் நளீமி தெரிவித்தார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment