காத்தான்குடி சன்றைஸ் வி்.கழக உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு…..

விசேட நிருபர்.

2013-03-24 21.31.30காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினா்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரயமைச்சா் கௌரவ தாஜூல் மில்லத் அல் ஹாஜ். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையிலான சிநேகபூர்வ   சந்திப்பு ஒன்று ( 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை ) அமைச்சரின் காத்தான்குடிக் காரியாலயத்தினில் இடம் பெற்றது.  

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாடரங்கின் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடை பெற்று வரும் நிலையில் விளையாட்டு வீரா்களின் அன்றாட பயிற்சி விடயங்கள், வீரா்களின் பல்வேறு பட்ட தேவைகள் தொடர்பாகவும் மிகவும் விரிவாகவும்  பேசப்பட்டது.

இச்சந்திப்பின் போது அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினா்   சிப்லி பாறுாக்கும் பிரசன்னமாகி இருந்தார். சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவா் சகோதரா் என்.எம்.ஸாஹிர், முன்னால் செயலாளர். அல்ஹாஜ். ஏ.எல்.டீன் பைரூஸ், பொருளாலர். எம். ஜ.எம். பைசர், எம்.எச்.எம்.நழீம்,எம். சமீம்   எம்.ஜ.எம்.மர்சூக்,கே.எல்.எம்.இப்றாஹீம், கே.எல்.எம்.றஹீம், எம்.முக்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக செயல் பட்டு வரும் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் வளா்ச்சிக்கு அமைச்சரின் பாரிய பங்களிப்புகள் தொடா்டபான விடயங்கள் பல இதன் போது நினைவு படுத்தப் பட்டன.

விளையாட்டு தொடா்பான பல்வேறு பட்ட பாரிய திட்டங்களை இன்ஷா  அல்லாஹ் எதிர் காலங்களில் நாங்கள் மேற் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக இதன் போது   பிரயமைச்சா் கௌரவ தாஜூல் மில்லத் அல் ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.2013-03-24 21.31.302013-03-24 21.07.292013-03-24 21.06.392013-03-24 21.05.562013-03-24 21.05.31

Published by

Leave a comment