
பழுலுல்லாஹ் பர்ஹான்
அல்ஹாஜ் மௌலவி செட். ஏ. ஹகீமுல் அமீன் (பலாஹி) கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். ஏ. மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவனாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் பழைய மாணவரும், காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் (சி.ஐ.ஜி) உப தலைவரும், மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயளின் பொருளாளரும் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார்.
குறிப்பு இவர் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் கல்வி கற்று மௌலவி பட்டம் பெற்று வெளியான மௌலவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment