நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம்.
ஆனால் எங்களது நாட்டில் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த நிறுவமும் இஸ்லாமிய வரையரைக்குள் நின்று இஸ்லாமிய சரீஆ சட்டத்திட்குள் இயங்குகின்றது என்பதை இந் நாட்டில் எந்தவிதமான முக்கிய இஸ்லாமிய அமைப்புகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை என்பதே இன்று நாம் அறிந்திருக்காத ஒரு விடயம் என்பதை இன்று நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
ஏனெனில் இலங்கையில் எங்களது பொதுவான விவகாரங்களை எங்களது மதிப்பிற்குறிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையே கையாள்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையிலுள்ள எந்த விதமான இஸ்லாமிய வங்கி நிறுவனங்களையும் அதனது சரீஆ அமைப்பினையும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதித்துவப் படுத்தவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.
எங்களது பணத்தை வைப்பு செய்வதற்கும், வாகணங்களை குத்தகை அடிப்படையில் எடுப்பதற்கும் இஸ்லாமிய வங்கி நிறுவணங்களை நம்பி செல்கின்றோம். ஆனால் இந்த வங்கிகள், கம்பணிகள் இஸ்லாமிய வங்கிகள் அல்ல என்பதை எமது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு எமது தனிப்பட்ட விவகாரமும் ஒரு இஸ்லாமிய வங்கி நிறுவனத்துடன் உள்ளதால் என்னாலும் உறுதியாக கூற முடியும் . இந்த நிறுவனம் இஸ்லாமிய பெயா் கொண்ட கொடுரமான வட்டி வங்கியாகும்.
முஸ்லிம் சகோதரா்களை வைத்தே எமது பகுதிகளில் எங்களது சொத்துக்களை இஸ்லாமிய முறைமை என்று கூறி எம் சமூகத்தின் பொருளாதாரத்தை வட்டியோடு கொள்ளையடிக்கின்றார்கள். ஆகவே எமது சொத்துக்களை ஹலாலாக பாதுகாப்பதற்கு இவ்வாறான வங்கிகளிலிருந்து உடனடியாக ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
மேலதிகமான தகவல்கள் கட்டம் கட்டமாக வெளிவரும் என்பதையும் உடனடியாக விபரங்களை பெற விரும்புவோர் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கடிதமும் இத்துடன் இனைக்கப் பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
MIM. ஆஸாத்
பிரதான வீதி , காத்தான்குடி.
mail: mimaasath@yahoo.com



Leave a comment