‘எல்லோருக்கும் வசந்தம்’ திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

பழுளுல்லாஹ் பர்ஹான்

IMG_1768
BY: FM. Farhan

‘எல்லோருக்கும் வசந்தம்’ மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற சுனாமிக்குப் பின்னரான கரையோர புனர்நிர்மான வளங்களின் முகாமைத்துவ செயற்திட்டத்தில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (23.03.2013) சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது.

குறித்த வீடுகள் மற்றும் சுய தொழில் விற்பனை நிலையம் என்பன  கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இபாட் நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

IMG_1768
WWW.YOURKATTANKUDY.COM

இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவ குடும்பங்கள் 500 பேருக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடனுக்கான காசோலை அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு இவ்அபிவிருத்தி திட்டங்களுக்கு 62 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_1771
WWW.YOURKATTANKUDY.COM
IMG_1781
WWW.YOURKATTANKUDY.COM

Published by

Leave a comment