இளைஞர் சேவை நிலையத்தின் இரண்டாவது சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு

kalmunai– காத்தான்குடி நிருபர்

சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தின் இரண்டாவது சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22.03.2013) மாலை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர பிதா கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 இதன்போது கணிணி, ஆங்கில, சிங்கள மற்றும் ஹொட்டேல் முகாமைத்துவம் போன்ற துறைகளில் சான்றிதழ் மட்டத்தினை பூர்த்தி செய்த 152 மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment