– ஹிஸ்புல்லாஹ் இப்றாஹீம்
கடந்த 2 மாதங்களாக இந்நாட்டில் ஹலால் தேவையில்லை என்று ஆக்ரோஷங்களை எழுப்பி பல ஹலால் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொது வெற்றியடைந்து விட்டது என்று 11.03.2012 அன்று வெளியான ‘ஹலால் சான்றிதழ் இனி நாட்டில் கிடையாது’ என்ற செய்திக்குப் பின்னல் பலர் கூறி வருவது அவதானிக்கத் தக்கது .
அதை விட மேலாக எம்மில் சிலர் வெளிநாட்டு ஏற்றுமதியளர்களுக்கு இலவசமாக ஹலால் சான்றிதழ் வழங்குவதாக இருந்தால் இனி ஜம்இய்யதுல் உலமா பிச்சையா எடுக்கப் போகிறது என்பது போன்ற மனதை புண்படுத்தக் கூடிய பல வார்த்தை பிரயோகங்களினால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவையே சாடிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.
இத்தருணத்தில் இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாம் ஹலாலுக்கு எதிரான நடவடிக்கைகளால் நாம் என்ன வெற்றியை அடைந்து கொண்டோம் இ ஹலால் சான்றிதழில் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டதின் காரணமாக எமக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பது பற்றி சிந்திப்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாகும் இவ்வாறான ஒரு சான்றிதழை நாம் இழப்பது கஷ்டமாக இருந்தாலும் நாம் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும்.
அதாவது எமக்கே இவ்விடயத்தை சகிக்க முடியவில்லை எனின் ஹலால் சான்றிதழைஉருவாக்கி இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய ஜம்இய்யதுல் உலமா எவ்வளவு கவலையடைந்திருக்கும் என்பதை ஒவ்வருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்
பொதுபலசேனாவினால் ஹலால் சான்றிதழுக்கு எதிரான நடவடிக்கைகளால் எமக்கு எற்பட்ட நன்மைகள்
1. நாட்டில் ஹலால் சின்னம் பார்த்து பொருட்களை வாங்கும் வழிமுறை முஸ்லீம்களிடம் அரிதாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது முஸ்லீம்கள் அனைவரும் ஹலாலை தேடி வாங்கும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது
2. பலபிரச்சனைகளை எதிர்கொண்டும் எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நாட்டின் நலனுக்காக இப்பாரிய விட்டுக்கொடுப்பை மேற்கொண்ட முஸ்லீம் சமுகத்தைப் பற்றி ஏனைய சமுகங்களிடம் நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது
3. இந்நாட்டு முஸ்லீம்களுக்கென்று உள்ள ஜம்இய்யதுல் உலமாவின் திறமையானவழிநடத்தலும், அதன் மதிப்பும் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் அந்நியர்கள்கூடபார்த்து வியக்கும் அளவுக்கு உயர்வு பெற்றமை.
4. நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி முஸ்லீம்களிடமே உள்ளது. எனவேஇந்நாட்டை முஸ்லீம்களே ஆழ்கின்றனர் என்ற உள்ரங்கமான உண்மை வெளியானமை.
5. அனைத்து முஸ்லீம்களும் ஒரே குரலில் இவ்விடயத்தை அணுகி ஒற்றுமையில்லா சமூகம் என்ற கருத்து நீக்கப்பட்டு ஒரே தலைமைத்துவத்திற்குக் கீழால் ஒன்றுபட்ட சமூகமே என்று சர்வதேசத்திற்கு உணர்த்தியமை.
மேலும் நாம் கொள்கையில் ஒன்றுபட்டவர்கள், உறுதியானவர்கள் என்று இந்நாட்டிற்கு உணர்தியமை.
ஹலால் சான்றிதழைல் சில விட்டுக் கொடுப்புக்கள் காரணம்க முஸ்லீம்களுக்கு கிடைத்த இலாபம்
2 மாதங்களாக ஹலாலை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பல நச்சுக்கருத்துக்களைப் பரப்பி, எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொதுபலசேனாவினால்சில நாட்களுக்கு முன் விடுக்கப்பட்ட அறிவிப்பு எதிர்வரும் சிங்களப் பெருநாளுக்கு முன்னால் ஹலால் சான்றிதழ் நிறுத்தப்படாவிட்டால் நாட்டில் புத்த புரட்சி வெடிக்கும் என்பதாகும்.
உண்மையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் ஆத்திரமடையும் பொதுபலசேன ஹலால் விடயத்தில் மட்டுமல்ல, இன்னும்பல விடயங்களில் தலையிட்டு இறுதியில் நாட்டில் முஸ்லீம்களே தேவையில்லைஎன்ற நிலைக்கு வந்து விட்டால் சிங்களப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்சகோதரர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியாகலாம்.எனவே இந்த விட்டுக் கொடுப்பு அவ்வாறான அச்சமான நிலைக்கு இட்டுச் செல்லாமல் பொதுபலசேன வின் வேகத்திற்கு தடையாக அமையலாம்.அவ்வாறு மீண்டும் பொதுபலசேன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் பலர்களுடைய நேர்வழிக்குஅது காரணமாக அமையலாம்.
இவ்வாறு இன்னும் பல நன்மைகளை ஹலால் விடயம் இட்டுத்தந்துள்ளது.
கவலையான விடயம் என்னவெனில் இவ்வாறு சிந்திக்காத எம்மில் சிலர் எல்லை கடந்த வார்த்தைப் பிரயோகங்களை ஜம்இய்யாவின் உலமாக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடுவதை நாம் அவதானிக்கிறோம்.
சகோதரர்களே! இந்நாட்டில் நம்மில் அதிகமானவர்கள் ஹலால் சின்னத்தைப் பார்த்து பொருட்களை கொள்வனவு செய்பவர்களாக இருக்கவில்லை. ஆனால் தற்போது நம் அனைவருக்கும் ஹலால் பற்றிய விழிப்புனர்வு எம்மில் விதைக்கப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் நாம் எப்படியாவது ஜம்இய்யா காட்டும் வழிமுறையில்ஹலாலான பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்போம்
இதற்காக உலமாக்கள் எத்தனை கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் இன்று நாட்டின் நலனுக்காக குறிப்பாக எம் சமூகத்தின் நலனுக்காக ஹலால் சின்னத்தின் விடயத்தில் சில விட்டுக்கொடுப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஹலாலுடைய உணர்வு யாருடைய உள்ளத்தை விட்டும் போகவில்லை.
இந்நாட்டில் ஹலால் என்ற உணர்வில் பின்தங்கி இருந்த நாம் இன்று அதில் உறுதியாக உள்ளோம். இன்று நாம் ஒவ்வொருவரும் ஹலாலைத் தேடுகிறோம் அதற்காக கொதித்தெழுகின்றோம்.
இந்நாட்டில் இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் இது மட்டுமல்ல, இன்னும் பல வெற்றிகள் எம்மை முன்னோக்கியிருக்கின்றன. நாம் பொறுமையாகவும் ஒன்றுபட்டு ஒரே குரலில் இருந்தால் இன்ஷா அல்லாஹ்.
அன்று ஹுதைபிய்யாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விட்டுக்கொடுத்ததன் பலனாகவே மக்கா வெற்றி கிடைத்தது. இன்று எம் சமூகத்தின் நலனுக்காக சில விட்டுக் கொடுப்புக்கள், அல்லாஹ் நாடினால் முஸ்லீம் நாடாக இலங்கை மாற ஒரு காரணமாகலாம்
எனவே நாம் அனைவரும் ஒரே குரலில் இருப்போம். வீணாக எம் சமூகத்தை காட்டிக் கொடுக்கக் கூடிய வார்த்தை பிரயோகங்களை விட்டுவிடுவோம்.
குறிப்பாக அ.இ.ஜ. உலமாவின் பூரண வழிகாட்டலுடன் இவ்விடயத்தை அணுகுவோம். ஜம்மியாவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழஇன்ஷா அல்லாஹ் எமக்கே வெற்றி.
சத்தியம் என்றும் நிலைத்தே இருக்கும்!
Leave a comment