பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களைக் கண்டிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் கண்டன கூட்டம் கல்முனையில்

kalmunai– பழுளுல்லாஹ் பர்ஹான்

முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை  ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கல்முனையில் ஏற்பாடு செய்துள்ளது.

முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் எதிர் வரும் 25 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் இக்கூட்டம் நடைபெறவள்ளதாக முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Published by

Leave a comment