
-MJ
மீண்டும் நேற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத வன்செயல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கிறது. இதன் காரணமாக இதுவரை 20 பேர் வரை இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது நம்பப்படுகிறது.
மத்திய நகரான மெய்டிலாவிலேயே இந்த புதிய வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த இரவு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிப் போயின. வெளியில் செல்வதற்கு மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள்.

நாட்டின் மேற்குப் பகுதியில் றொஹிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் கடந்த வருடம் நடந்த மோதல்களை அடுத்து இங்கும் கணிசமான சிறுபான்மை முஸ்லிம்களுடனான உறவு சீர்கெட்டு வந்ததாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் முஸ்லிம்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அங்கு பிரப்பிக்கப்பட்டிருக்கின்றது.
Leave a comment