சேமிப்பில் ஆர்வமுள்ள புலமைப்பரிசில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்க நிதி அமைச்சு நடவடிக்கை

BY: FM. Farhan
BY: FM. Farhan

-பழுளுல்லாஹ் பர்ஹான்

சேமிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வுகளை நிதி அமைச்சின் ஆலோசனையில் அரச வங்கிகள் தற்போது நடாத்திவருகின்றன.

 இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வொன்றினை மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய பணிமனையின் ஏற்பாட்டில் இப்பணிமனையில் இன்று (21.03.2013) வியாழக்கிழமை நடைபெற்றது.

 மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஏ.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சை சாதனை படைத்த 22 மாணவர்கள் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வில் உதவி பிராந்திய முகாமையாளர் ஜே.சி.ஜயதிலக்க, மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு கோட்டைக்கல்விப் பணிப்பாளர் எஸ்.டேவிட் மற்றும் பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 இங்கு மக்கள் வங்கியின் மட்டக்களப்பு நகரக்கிளை முகாமையாளர் எஸ.சரவணபவன் சேமிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்துரை வழங்கியதுடன் விஷேட கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இதன்போது தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment