07வது தேசத்திற்கு மகுடம் (‘தெயட்ட கிருள’) கண்காட்சி 23ஆம் திகதி அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம்

DEYATA KIRULAபழுளுல்லாஹ் பர்ஹான்

இம்முறை 07வது தேசத்திற்கு மகுடம் (‘தெயட்ட கிருள’) தேசிய அபிவிருத்திக் கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மார்ச் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கண்காட்சியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் சுமார் 02 மில்லியன் பேர் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. கண்காட்சியைப் பார்வையிட வருகை தரும் மக்கள் எவ்விதத்திலும் சிரமங்களை எதிர்கொள்ளாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூபா 10625 மில்லியன் செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ள இம்மாபெரும் தேசிய கண்காட்சிக் கூடங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவரீதியாகத் திறந்து வைக்கவுள்ளார்.

சனிக்கிழமை முதல் 29ஆம் திகதி வரை அம்பாறையில் இடம்பெறவுள்ள இக் கண்காட்சியில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 4 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை தலைவர் கேர்ணல் பிரியதர்சன ரட்ணாயக்கவின் பணிப்புரைக்கமைய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 1000 நிறுவனங்களின் உற்பத்திகள், சேவைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் அழகுக் கலை, இலத்திரனியல் தொழில்நுட்பம், பேக்கரி தொழில்நுட்பம், வெல்டிங் (ஒட்டுவேலை) தொழில்நுட்பம் போன்ற பயிற்சி நெறிகளுக்கான காட்சிக்கூடங்களே ஹாடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

06வது தேசத்திக்கு மகுடம் கண்காட்சி சென்ற வருடம் அநுராதபுரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment