![timthumb[1] (2)](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/timthumb1-2.jpg?w=150&h=93)
-MJ
இங்கிலாந்தில் சுவிண்டன் நகரில் குடும்ப வைத்தியராக தொழில் புரிந்து வந்த டேவின்டர் ஜீட் பெய்ன் எனும் 45 வயதுடைய நபர் பொரிஸாரால் கைது செய்யப்பட்டு, சுவிண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றார்.
இங்கிலாந்தின் சுவிண்டன் அரச மருத்துவமனை (GP) யில் வைத்தியராக இருந்த டேவின்டர், தனது கைக்கடிகாரத்தில் இரகசியமாக மறைக்கப்பட்ட (Hidden Camera) or (Spy Camera) கமெரா மூலமாக 200 பெண் நோயாளர்களை நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் படமெடுத்திருக்கின்றார். இவ்வாறு இரகசிய படமெடுப்பிற்குள் உட்பட்டவர்கள் அனைவரும் 14-51 வயதிற்கிடைப்பட்ட பெண்கள் என்பதும் தற்பொழுது நிரூபனமாகி இருக்கின்றது.
இங்கிலாந்தின் பாலியல் வயதுச் சட்டம் 16ஆக இருக்கும் நிலையில் 14, 15 வயதுகளுக்கிடைப்பட்டவர்களை இரகசியப்படமெடுத்ததானது, சிறுவர் துஸ்பிரயோகத்திலும், குற்றத்திலும் மேலும் டேவிண்டர் தண்டனைக்கு உள்வாங்கப்படுவது நிரூபனமாகி இருக்கின்றது.
![timthumb[1] (2)](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/timthumb1-2.jpg?w=300&h=187)
நோயாளர்களை பரிசோதிக்கும் போது தனது கைக்கடிகாரத்தில் பொறுத்தப்பட்ட மறைத்துவைக்கப்பட்ட இரகசிய கமெரா மூலமாக பெண் நோயாளர்களை கட்சிதமாக படமெடுத்துள்ளார். சில பெண்களை பாலியல் பலாத்காரத்தில் படமெடுத்திருப்பதாகவும், வீடு சென்று பார்க்கும் நோயாளர்களை பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்தி வந்ததாகவும் மேலதிக தகவல்கள் நீதிமன்றத்தில் வெளிவந்திருக்கின்றன.
![timthumb[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/timthumb1.jpg?w=300&h=184)
இறுதியாக பரிசோதிக்கப்பட்ட 19 வயதுடைய மாணவி ஒருவர் பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் ‘ இவ்வைத்தியர் எனது விடுதிக்கு வந்து என்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய எத்தனித்தார் எனவும், பாலியல் பொறிக்குள் கொண்டு சென்றார்’ எனவும் கூறினார்.
இவரது முறைப்பாட்டை அடுத்து, வில்செயார் பொலிஸார் துருவி துருவி இரகசியமாக வைத்தியர் பெய்னை கண்காணித்து வந்தனர். இம்மாணவி கடந்த வருடம் ஜூன் மாதம் குறித்த வைத்தியரால் பலவந்தப்படுத்தப்பட்டார் என முறைப்பாட்டில் தெரியவந்திருந்தது.
![timthumb[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/timthumb2.jpg?w=224&h=300)
361 வீடியோ கிளிப்கள் இதுவரை இவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றி இருக்கின்றனர். இவற்றுள் நோயாளர்களைப் பரிசோதிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் 10 நிமிடங்கள் தொடக்கம் 45 நிமிடங்கள் வரை நீளமுடையன எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரது மடி கணனியைப் பரிசோதித்த வில்செயார் பொலிஸார், கைக்கடிகாரத்திலிருந்து இறக்கிவைத்த 300க்கும் மேற்பட்டி ஆபாச கோவைகளை மடி கணனியில் சேமித்து வைத்திருந்ததாகவும், இவை அனைத்தும் குறித்த மருத்துவமனையின் இவரது 3 வருட கால சேவைகளின் போது பிடிக்கப்பட்ட இரகியக் காட்சிகள் எனவும் கூறினர்.
![timthumb[3]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/timthumb3.jpg?w=300&h=187)
இம் மருத்துவமனையில் பெண்கள் மாத்திரம் 3000 பேர் பதிவு செய்திருக்கின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட பெண்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
39 பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக பெய்னுக்கு தற்பொழுது சுவிண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றனது.
Leave a comment