
-பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் காத்தான்குடியில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக ‘Bபம்மிங்’களை (வீதித் தடை அணை) இட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி03 முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதான வீதியில் இரண்டு ‘Bபம்மிங்’களை (வீதித் தடை அணை) இட்டுள்ளது.
வாகனங்களின் வேகங்களை மட்டுப்படுத்தி வீதி விபத்துக்களை தடுக்கும் வண்ணமே இந்த ‘Bபம்மிங்’கள் போடப்பட்டு வருகின்றன.
குறித்த இவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் வேகமாக வாகனங்களை செலுத்துவதினாலேயே இந்த ‘Bபம்மிங்’கள் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment