
– FM. பர்ஹான்
நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள், மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்தில் விசேட உரையாற்றினார்.
சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்த மிக முக்கியமான இந்நிகழ்வில், இலங்கை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி சாதி, மத, இன வேறுபாடுகள் அற்ற சமுதாயமாக இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரபா மலையடிவாரத்தில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் குறிப்பிட்ட ‘ மக்களே! மனிதர்களை பழிவாங்குதல், அறியாமை, கபடம், இன, வெறி எல்லாவற்றையும் இன்றுடன் என் காலடியில் புதைத்துவிட்டேன்’ என வரும் ஹதீஸை சுருக்காமாகக் கூறி, அங்கிருந்தோரை வியக்க வைத்தார்.
பல்லின சமூகமாக வாழும் இலங்கை மக்கள் குறிப்பாக தமிழர்களும், முஸ்லிம்களும் இந்நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் இந்நாட்டில் சிலரால் ஏவிவிடப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாம் அல்லாத ஒருவரால் நபி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மேற்கோள் காட்டப்பட்டது பெருமைக்குரிய விடயம். படித்தவர்கள் நாங்கள் என்பதை பிரதம நீதியரசர் நேற்றைய தனது விசேட உரையில் நிரூபித்திவிட்டார”
Leave a comment