
– ரைஸ்
‘தயட கிருல’ திட்டத்தின் கீழ் கிண்ணியாவின் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இன்று குட்டிக்கராச்சி பாலத்திலிருந்து அடப்பனார் வயல் வரையான வீதி அiமைப்பு ஆரம்ப வேலைகள் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘தயட கிருல’ திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்திகள் கிண்ணியாவில் இடம்பெற்று வருகின்றது. கிண்ணியா நகரசபைக்கு உட்பட்ட பல வீதிகள் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி அவர்களினால் தெரிவு செய்யப்பட்டு அவற்றை தனது கண்காணிப்பின் கீழ் அமைப்பதற்குறிய ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்ற நிலையில் கிண்ணியா நகரசபையின் கீழான வீதிகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குட்டிக்கராச்சி பாலத்திலிருந்து அடப்பனார் வயல் பிரதேசத்திற்கு செல்லும் வீதியினூடாக அதிகமான மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்வதால் அவ்வீதி போக்குவரத்திற்கு இடைஞ்சலான நிலையில் காணப்படுவதை கருத்திற் கொண்டு நகரபிதா ஹில்மி அவர்கள் தயல கிருல திட்டத்தில் அபிவிருத்தி செய்யவுள்ள வீதிகளில் இவ்வீதிக்கு முன்னுரிமை கொடுத்து அமைப்பதற்கான ஒழுங்குகளை செய்து தற்போது இவ்வீதி அமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று குட்டிக்கராச்சி பாலத்திலிருந்து அடப்பனார் வயல் வரையான சுமார் 1500 மீற்றர் தூரம் கொண்ட வீதி தார் வீதியாக அமைப்பதற்கு ஒரு கோடி 6 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வீதியமைப்பு வேலைகளை முனீஸ் கன்சக்சன் முன்னெடுக்கவுள்ளது.

இதன் ஆரம்ப வேலைகள் கிண்ணியா நகரபிதா ஹில்மியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் சசிதரன், கன்சக்சன் உரிமையார் மற்றும் அப்பிரதேச மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment