
பழுளுல்லாஹ் பர்ஹான்
கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனமொன்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கையளிப்பு நிகழ்வு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் கையளிக்கப்பட்டது.
கெப் வாகனத்தின் தேவைப்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சந்தித்து முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுத்த வேண்டுகோளை அடுத்தே மேற்படி வாகனம் மாநகர சபைக்கு வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment