
பழுளுல்லாஹ் பர்ஹான்
கிழக்குச் சோனகர்களே! எமது அரசியல் தலைவர்களை நம்பியது போதும் இனியும் தூங்காதீர்கள் ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹூ அக்பர்’ எனும் தொனிப் பொளுளிலான துண்டுப்பிரசுரமொன்று கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாங்கள் இந்நாட்டுக்காக பல தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் செய்து எமது சொந்தங்களையும் இழந்துள்ளோம் என்பது முழு உலகமும் அறிந்ததே.இந்த நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல.மூவினத்துக்கும் சொந்தமான நாடு. என்ற துவக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில்
‘இஸ்லாமிய சோனகர்களே!’ நாங்கள் இன்னும் தூங்க வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் நாம் அன்று எதிர்பார்த்த தருணம் இப்போது நாம் வாழும் போதே வந்துவிட்டது. எம்மை அல்லாஹ் பாதுகாப்பான். அதன் வழியில் எம்மைச் சுற்றி பல முஸ்லிம் நாடுகள் உள்ளன அவர்கள் எமக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.புலம்பெயர் தமிழர் என்று பார்க்கும் போது அது இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும்தான் ஆதரவு வழங்குவார்கள். முஸ்லிம்கள் என்று வரும் போது உலகில் எமக்கு எந்தெந்த நாட்டிலும் எந்தெந்த மூலையிலும் எந்த தேசத்திலும் வாழும் முஸ்லிம்கள் எம்மை அவர்களது புலம்பெயர்ந்த சகோததரர்களள் என்ற அடிப்படையில் எமக்காக உதவியும் குரலும் கொடுப்பார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய தமிழ் நாடு மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மாத்திரம்தான் குரல் கொடுப்பார்கள்.ஆனால் ஈமான் கொண்டோர் எனற அடிப்படையில் அனைத்து மொழி பேசும் எல்லா முஸ்லிம்களும் குரல் கொடுப்பார்கள்.
எமது முஸ்லிம் நாடுகளில் பிச்சை எடுத்து கொண்டு எம்மையே நசுக்க நினைக்கும் இந்த சிங்கள கடும் போக்கு வாதிகளுக்கு தகுந்த பாடங்களை கற்பிக்கும் வண்ணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 22ம் திகதி கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு முன்பாக அனைத்து ஈமான் கொண்ட இஸ்லாமிய சூடு சொறனை உள்ள சோனகர்களை 60நிமிடம் இலங்கை முஸ்லிம்களுக்காக இந்த அகிம்சை போராட்டத்தில் வயது வித்தியாசமின்றி கலந்து கொள்ளுமாறு அந்த துண்டுப்பிரசுரத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புனித போராட்டமாக இருப்பதால் இந்த ஆர்பாட்ட பேரணியை எந்த அமைப்புக்களும் உரிமை கோரி நடாத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் ஏனெனில் அது முஸ்லிம்களின் ஒற்றுமையையும் இந்த புனித பணியையும் கெடுத்து விடுமெனவும் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வார்ப்பாட்ட பேரணி கல்முனை மாநகர சபை சந்தி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment