எயார் அரேபியா, /பிளை துபாய் உட்பட சர்வதேச விமானங்கள் தரையிறங்கின: ஞாபகார்த்த முத்திரையும் உத்தியோகபூர்வமாக வெளியீடு

mattala (3)இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது.

சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக நேற்று மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களினால் மகத்தான வரவேற்பளிக்க ப்பட்டது.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலி ருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘சிற்றி ஒப் ருஹுணு மாஹம்புர’ விசேட விமானம் மூலம் ஜனாதிபதி அவர்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமானத்திலிருந்து அவர் தம் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் தரையிறங்கியபோது இரு மருங்கிலும் தேசியக் கொடிகளை அசைத்து பாடசாலை மாணவர்கள் அவர்களை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை யடுத்து மத்தள விமான நிலையத்துக்கான பெயர்ப்பலகையை 11.23 சுபவேளையில் ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்து வைத்தார்.

ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சுமார் 2000 ஹெக்டயார் பரப்பளவினைக் கொண்டது. இதன் முதற் கட்ட நிர்மாணப் பணிகள் 800 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ‘சிட்டி ஒப் ருஹுணு மாஹம்புர’ விமானம் முற்பகல் 10.55 ற்கு மத்தள விமான நிலைய ஓடு பாதையை வந்தடைந்ததுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்விமானத் திலிருந்து விமான நிலைய திறப்பு விழா நிகழ்வு மேடையை வந்தடைந்தார்.

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தி மதத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பெளத்த பிக்குகள் பிரித் பாராயணம் செய்ய நிகழ்வுகள் ஆரம்பமாயின.

ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான மேற்படி விமானத்திலிருந்து ஜனாதிபதி அவர்கள் முற்பகல் 11.10ற்கு தரையில் கால் பதித்தார். அவருடன் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரட்ன, பிரதமரின் பாரியார், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ் தர்கள் பலரும் மதத் தலைவர்களும் விமானத்தில் வந்திறங்கினர்.

அங்கிருந்து நிகழ்வுகள் நடைபெறும் மேடைவரை ஜனாதிபதி அவர்களை இரு மருங்கிலும், தேசியக் கொடிகளை ஏந்தி நின்ற பாடசாலை மாணவர்கள் கொடிகளை அசைத்து வரவேற்றதுடன் கலாசார அம்சங்களும் இடம்பெற்றன.

ஜனாதிபதி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு அத்துடன் நேற்றைய நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்ப மாயின.

எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான வாழ்க்கையை இலக்காகக் கொண்டே நாட்டில் இத்தகைய பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

அந்த வகையில் அங்கு குழுமியிருந்த பாடசாலை மாணவர் களுடன் ஜனாதிபதி அவர்கள் அளவளாவிய பின்னர் விமான நிலையத்திலுள்ள பெயர் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார். அதனையடுத்து அங்கு நிர்மாணிக்கப்பட் டுள்ள புத்த பெருமானின் சிலையை வழிபட்ட ஜனாதிபதி விமான டிக்கெட் பரிசோதனைப் பிரிவைப் பார்வையிட்டார்.

மத்தள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவை நினைவு கூரும் வகையில் விசேட ஞாபகார்த்த முத்திரை யொன்று நேற்று வெளியிட்டு வைக்கப் பட்டது. அதனை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க வெளியிட்டு வைத்ததுடன் முதல் தபால் தலையை ஜனாதிபதி அவர்களுக்குக் கையளித்தார்.

நேற்றைய இந்த நிகழ்வின் போது மேலும் பல விமானங்கள் மத்தளயில் தரையிறங்கின. முதலாவது விமானமான யூ. எல். 226 விமானம் துபாயிலிருந்து பயணத்தை ஆரம்பித்து 11.35ற்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 11.50 அளவில் எயார் அரேபியா விமானமும் 12.13க்கு ஃபிளை துபாய் விமானங்களும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தன. வெளிநாடு களிலிருந்து விமானம் மூலம் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் மாலையணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் சீன பிரதிப் பிரதமர் லோயூங்ஹா, அமைச்சர்கள் பிரியங்கர ஜயரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, ஏ. எச். எம். பெளஸி, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள், பிரதிய மைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனா உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நேற்றைய இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பெருமளவில் செய்தி சேகரிப்பில் ஈடு பட்டிருந்தனர்.

தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி இந்த நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்தது.

பல்வேறு கலை கலாசார அம்சங்கள் நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்ததுடன் பல்வேறு பிரதேசங் களிலிருந்தும் பெருமளவு பொதுமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

-தினகரன்

Published by

Leave a comment