
பழுளுல்லாஹ் பர்ஹான்
2013ம் ஆண்டுக்கான ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி இம்மாதம் 23ம் திகதி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் பிரதான வைபவம் அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருவதுடன் அவற்றை மேற்பார்வை செய்வதற்காக விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று 2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் முன்னேற்பாடுகளை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் குழு அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்டு கண்காட்சி கூடங்களின் வேலைகளை துரிதப்படத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
Leave a comment