விசித்மா கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பம்

BY: FM. Farhan
BY: FM. Farhan

-பழுளுல்லாஹ் பர்ஹான்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்துள்ள தேசிய கைப்பணியாளர்களது உற்பத்திகள் அடங்கிய கண்காட்சி இன்றைய தினம் கொழும்பு, லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களது பாரியார் புஸ்பா ராஜபக்ஷ ஆகியோர் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

BY: FM. Farhan
BY: FM. Farhan

25 தேசிய கைப்பணியாளர்களது உற்பத்திகள் இக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சி 21ம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் கைப்பணியாளர்கள்; தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது தயாரிப்புகள் இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன உட்பட பல இலங்கை இந்திய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

Published by

Leave a comment