பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம்-பல்வேரு நிகழ்வுகளில் பங்கேற்பு

BY: FM. Farhan
BY: FM. Farhan

-பழுளுல்லாஹ் பர்ஹான்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை  மேற்கொண்டார்.

இன்று முதன்முதலாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், முதலில் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி திரு.பொன்னைய்யா ஜோசப்பை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிவபாதசுந்தரம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவர் வினோபா இந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள்இநீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விஜயம் செய்தார்.

இவ்விஜயத்தின் போது  மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்  சட்டத்தரணி வினோபா இந்திரன் தலைமையில் இவருக்கு அணிவகுப்பு மரியாதையுடனான அதிஉயர் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

நீதிமன்ற கட்டிட வளாகத்தில் பிரதம நீதியரசருக்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற விஷேட கூட்டமொன்றிலும் பிரதம நீதியரசர் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரஇமட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்இ மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிவபாதசுந்தரம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவர் வினோபா இந்திரன்இ மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.மனாப், நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, மற்றும் வாழைச்சேனை நீதமன்ற நீதிபதி எம்.றியாழ், களுவாஞ்சிகுடி, மற்றும் ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன்இசட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதி நிதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற பதிவாளர்கள் நீதிமன்ற உத்தியோகத்தாகள்இநீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினால் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு நினைவுச்சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதையடுத்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட வேலைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment