முஸ்லிம்களுக்கெதிரான மத அடக்குமுறைகளை கண்டித்து அமைதியான சாத்வீகப் போராட்டம்

mroபழுளுல்லாஹ் பர்ஹான்

அண்மைக்காலமாக இலங்கை நாட்டில்; முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் அநீதிகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் எதிர்வரும் திங்கள் 25ஆம்  திகதி நாடுதழுவிய முழுமையான கடையடைப்பு செய்து வர்த்தக நிலையங்களை அலுவலகங்களை மூடி அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அமைதியான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ)இந்த அழைப்பை விடுத்துள்ளது.

‘சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயற்சிப்போரை சட்டத்தின் முன் நிறுத்து”இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கெடுபிடிகளை உடன் நிறுத்து’ ‘முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே’ உள்ளிட்ட பல்வேரு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைதியான சாத்வீகப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

mro

Published by

Leave a comment