கவிஞர் முஸ்தபா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 3ம் குறிச்சி ஹிஜ்ரா ஒழுங்கையைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது முஸ்தபா அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.மனாப் முன்ணிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பணியாளரும் கவிஞரும், கலைஞருமான இவர் காத்தான்குடி முகைதீன் சனசமூக நிலையம், 76 வாட் முகைதீன் சிக்கன கடன் வழங்கு கூட்றுறவுச் சங்கம் ஆகியவற்றின் செயலாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மஸ்ஜிதுல் குலபா உர் ராசிதீன் பள்ளிவாயல் ஆகியவற்றின் நிர்வாக சபை உறுப்பினருமாவார்.

இவர் மர்ஹூம்களான முஹம்மது இப்றாகீம் செயிலத்தும்மா தப்பதியினரின் மகனுமாவார் இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார்.

BY: FM. Farhan
அல்ஹாஜ் முஹம்மது முஸ்தபா JP

Published by

Leave a comment