
– பழுலுல்லாஹ் பர்ஹான்
தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் 2013 ‘கப்றுக புறவற’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது.
இதன் போது ‘கப்றுக புறவற’ நிகழ்ச்சித்திட்ட அறிமுகம், ‘கப்றுக புறவற’ நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள், தற்போது செயற்படுகின்ற ‘கப்ருக புரவர’ பிரிவுகள், ‘கப்ருக புறவற’ அமுலாக்கத்திற்கான பிராதான செயற்பாடுகள், 2013 வருடம் ‘கப்றுக புறவற’ செயற்படவுள்ள பிரதேச செயலக பிரிவுகள், கப்றுக சங்கங்களின் கட்டமைப்பு, கப்றுக சங்கங்களை தாபித்தல் அங்கத்துவம், கப்றுக உற்பத்தி, கப்றுக பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம், கப்றுக தொழில் உருவாக்கள் செயற்பாடுகள் சுய தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தல், கப்றுக ஆராய்ச்சி மற்றும் தகவல் வலைப்பின்னல், கப்றுக காப்புறுதி, கப்றுக நிதியம், கப்றுக கடன் நிகழ்ச்சித்திட்டம், கப்றுக சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம், இரண்டாம் கட்டம்,மூன்றாம் கட்டம், செயற்படுத்தப்படும் ஒழுங்குமுறை முதலாவது கட்டம், நான்காம் கட்டம் முன்னேற்ற மீளாய்வு மதிப்பீடு, அமுல்படுத்தல் போன்ற செயற்பாடுகள் பற்றி தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கே.சப்ரியினால் தெளிவான முறையில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இவ் நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் டப்ளியு.கே. பமுனுகொத்ஹே, மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுகி அருள் ராஜா ,அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் குணரட்ணம்,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கே.சப்ரி, வெளிக்கள உத்தியோகத்தர் ஜெகன், கப்றுக புறவற மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் , தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் வெளிக்கள உத்தியோகத்தர்களான ஏ.ஜே.எம். ராபி, ஏ.எல்.எம்.ஜலீல், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரி, உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


Leave a comment