இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சற்று நேரத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான ”சிட்டி ஒப் மாகம் ருஹுனுபுர “விமானம், இன்று சுபவேளையான 10.54 மணிக்கு மத்தலையில் தரையிறங்கியது. மத்தல விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த விமானத்தின் முதல் விமானப்பயணியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக தரை இறங்கினார்.
அதனை அடுத்து ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ,பிரதமர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அமைச்சர்களும் இந்த விமானத்தில் வந்திறங்கினர்.ஜனாதிபதிக்கு புதிய விமான நிலையத்தில் செங்கம்பல வரவேற்பு அளிக்கப்பட்டது.



Leave a comment