நன்றி நவிழ்கின்றோம்….

baby-yourkattankudy

புதிய காத்தான்குடி-02, பரீட் நகர், இல 36/A எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது கபீர் என்பவரது மகன் முஹம்மது வலீத் (வயது- 09-மாதங்கள்) என்ற  குழந்தைக்கு, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் சத்திர சிகிச்சை செய்வதற்காக ரூபா மூன்று இலட்சத்துக்கு மேல்  பணம் தேவைப்படுவதாக குழந்தையின் பெற்றோர் எமக்கு அறிவித்தனர்.

இக் குழந்தையின் தாய், தந்தை மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதால்  குறிப்பிட்ட பெருந்தொகைப் பணத்தைப் பெற்று குழந்தையின் சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள முடியாத  நிலைமையினை  நாம் அறிந்து எமது அன்புக்குரிய YOURKATTANKUDY  வாசகா்களிடம்  விடயத்தினை  செய்தி ஊடாக  இரண்டு மாதங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தி இருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்!  விடயத்தினை அறிந்த பல இதயங்கள் தங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் பணத்தினை  குழந்தைக்கு,  தாயின் வங்கிக் கணக்கிற்கு சுமார்  ரூபா-150,000/=  (ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம்) அனுப்பியிருந்தனர்.

அல்லாஹ்வின் உதவியோடும், மேலும் பலரின் நிதி உதவியுடனும்  குழந்தையின் சத்திர சிகிச்சை நல்லமுறையில் நடை பெற்று முடிந்துள்ளது.

மேற்படி குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்  உதவி புரிந்தவர்களுக்கும், பிரார்த்தித்தவர்களுக்கும் துஆ செய்வதுடன் தனது நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

எங்கள் அனைவரினதும்  ஈருல வாழ்வு  சிறப்புடன் அமைய நாமும்  அல்லாஹ்விடன் பிரார்திக்கின்றோம்.

என்றும் அன்புடன்,

பெற்றோர் சார்பாக,

YOUR KATTANKUDY.

சத்திர சிகிச்சையின் பின்னர்  முஹம்மது வலீத்

baby

Published by

One response to “நன்றி நவிழ்கின்றோம்….”

  1. maasaa allaah

Leave a comment