அல்ஹாஜ். எம்.ஏ .எம். மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்

mashooth
BY: FM. Farhan

-FM. பர்ஹான்

காத்தான்குடி 3ம் குரிச்சியைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ். எம். ஏ .எம். மஸ்ஊத்  அஹ்மத் -ஹாஷிமி அவர்கள்  அன்மையில் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவர் மர்ஹூம் ஏ.எம். அபூபக்கர் ஹாஜியார், பாத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.

காத்தான்குடி மெத்தைப் பள்ளி  வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியைக்கற்று,  சன்மார்க்கக் கல்வியை  ஜாமியதுள் ஜமாலிய்யா,   நாவலப்பிட்டி,  தாருல் உலூம் அல் -ஹாஷிமிய்யா அஅரபுக் கல்லூரியில்  கற்று மௌலவி-ஆலிம் பட்டம் பெற்றார்.

முன்னாள் கொழும்பு.06, கிருலப்பனை ஜும்மா பள்ளிவாயல் பிரதம கதீபாகவும், கிருலப்பனை அஹதிய்யா பாடசாலை அதிபராகவும், குல்லியதுள் இமாம் ஷாபிஈ அ .கல்லூரி விரிவுரையாளராகவும்   கடமையாற்றிய இவர், தற்பொழுது காத்தான்குடி அஸ்-ஸெய்யித் ஸைன் மௌலானா பள்ளிவாயலின் பேஷ் இமாமாக கடமையாற்றுகின்றார் . 

சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமான இவர், காத்தான்குடி  சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளராகவும், மஸ்ஜிதுல் குலபா இர்-ராஷிதீன் பரிபாலன சபை உறுப்பினராகவும், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிப் பிரிவு அங்கத்தவராகவும்,  ஜம்மியத்துல் உலமா பிறைக் குழு உறுப்பினராகவும், சேவையாற்றி வருகின்றார்.

mashooth
மௌலவி அல்ஹாஜ். எம். ஏ .எம். மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

Published by

Leave a comment