‘மதர் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் தவக்கால சிலுவைப் பாதை

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

‘மதர் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரியின் ஏற்பாட்டில் தவக்கால சிலுவைப் பாதை நிகழ்வு கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரியின் அதிபர் என். துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மூன்று மதத்தவர்களின் இறைவணக்கம், விஷேட உரைகள் ஊர்வலம் என்பன இடம்பெற்றன.

BY: FM. Farhan
BY: FM. Farhan

இவ்வைபவத்தில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே. டேவிட், தாண்டவன்வெளி பங்குத் தந்தை சீ.வீ. அன்னதாஸ்,  நாவற்குடா பங்குத் தந்தை ரஜீவன், கோட்டமுனை மெதடிஸ்த சபை முகாமைத்துவகுரு எம்.சாம்.சுபேந்திரன், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் யூ.எல். முபாறக் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

Your Kattankudy
Your Kattankudy

இதன்போது மும்மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கள், பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.

Your Kattankudy
Your Kattankudy

Published by

Leave a comment