புதிய காத்தான்குடி ஜென்னதுல் பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா

By FM. Farhan
By FM. Farhan

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி ஜென்னதுல் பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா பிர்தௌஸ் பள்ளிவாயல் நிருவாக சபை செயலாளர் அலி அக்கர் (அக்பர் பாதுஸா) தலைமையில்  பிர்தௌஸ் பள்ளிவாயல் மண்பத்தில் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இப்பரிசளிப்பு விழாவின் சிறப்புரையை காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை பணிப்பாளர் சபை உறுப்பினர் மௌலவி எம். பி. எம். பாஹிம் (பலாஹி) நிகழ்த்தினார். அத்தோடு பிரதம அதிதி உரையினை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும், ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபருமான மௌலவி எஸ். எம். அலியார் (பலாஹி) நிகழ்த்தியதுடன் கௌரவ அதிதி உரையினை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஏ. எல். ஜூனைதீன் நளீமி நிகழ்த்தினார்.

இதன் போது பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் முஅல்லிம் பி. ரி. எம். இல்யாஸ் (நஹ்வி), உதவி முஅல்லிம் எம். ஏ. சி. பாத்திமா சம்ஹா ஆகியோர் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ். எம். அலியார் (பலாஹி), கா-குடி  குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையின் செயலாளர் எஸ். எல். ஏ. கபூர் ஆகியோரினால் பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஜென்னதுல் பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையில் இருந்து இம்முறை இடம்பெற்ற குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் 6 ஆறு மாணவ மாணவிகள் கௌரவ மற்றும் சிறப்பு  அதிதிகளினால் விருதும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த பிர்தௌஸ் வித்தியாலய ஐந்து மாணவ மாணவிகள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் கதை, பேச்சு, பாடல் உட்பட இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிர்தௌஸ் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் ஏ. எல். எம். இல்ஹாம், ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி) கா-குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஜிப்ரி (மதனி), கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம் லெப்பை (பலாஹி), ஜாமிஉழ்லாபீரின் ஜூம்மா பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி றிஸ்வி ஹாபிஸ், புதிய கா-குடி பதுறிய்யா பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி பௌஸ் (பலாஹி), காத்தான்குடி சமூக பேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜே.பி, மெட்ரோ மர மால் உரிமையாளர் கே. எம். நஜீம், பிர்தௌஸ் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பிளர் எம். எச். எம். சலீம் உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment