தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட இலங்கையின் புத்த பிக்குகள்! பொது பல சேனாவின் பதில் என்ன?

அரசு அலுவலகத்தில் தஞ்சம்!!

Bodu bala sena-F47

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த  பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது.

Bodu bala sena
தஞ்சாவூரில் தமிழ் இளைஞர்களால் தாக்கப்படும் இலங்கை பௌத்த மதகுரு

இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு ‘இன்ப சுற்றுலா’ வந்திருக்கின்றனர். அவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட வந்த போது தமிழ் அமைப்பினர்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்து தாக்கியுள்ளனர். புத்த பிக்குகள் அலறி அடித்துக் கொண்டு திசைக்கு ஒருவராய் தப்பி ஓடினர். தமிழ் அமைப்பினர் தாக்குதலில் பல பிக்குகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. ஒருவழியாக ஓடிய பிக்குகள், தொல்லியல் துறை அலுவலகத்துக்குள்ளே சென்று தஞ்சம் கோரி தாழிட்டு உயிர் பிழைத்தனர்.

சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் இலங்கையிலிருந்து சுற்றுலாவுக்காக வந்த சிங்களர்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

bodu bala sena (2)
தாக்குதலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் இலங்கை பௌத்த மதகுரு

இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்க அனைத்து இந்தியாவும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஒரு கோடி மக்களைத் தாண்டிய பிரமாண்டமான எதிர்ப்புப் பேரணியை இலங்கைக்கு எதிராக தயார் படுத்துவதற்கு தமிழ்நாடு அமைப்புக்கள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் செம அடிவாங்கி ஓடி தஞ்சம் புகுந்திருக்கும் புத்த மதகுருமார்களுக்கு இலங்கையில் தற்பொழுது முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டிருக்கும் சண்டியன் பொது பல சேனாவின் பதில் என்னவாக இருக்கப் போகின்றது என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது.

சிங்கள மதகுருமாருக்கு ஏற்பட்ட அடியை இலங்கை அரசாங்கம் எவ்வாறு இந்தியாவுக்கு பதில் கொடுக்கப்போகின்றது அல்லது சமாளிக்கப்போகின்றது என்பதும் மற்றுமொரு விடயம்.

Published by

Leave a comment