
பழுலுல்லாஹ் பர்ஹான்
பகவான் ராமகிருஸ்ணரின் ஆத்மீகக் குழந்தையும் செயல்முறை வேதாந்தத்தின் யுகபுருஸருமான சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு நிறைவினை உலகமெல்லாம் பலரும் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக சிறப்புறக் கொண்டாடும் இத்தருனத்தில் சுவாமி லிவேகானந்தரின் வாழ்வியற் சிந்தனைகள் வளரும் இளந்தலைமுறையினர் மத்தியில் கவனிப்பிற்குள்ளாகுவதன் மூலம் காத்திரமான சமூக உருவாக்கத்தின் செயல்முனைப்பு மிக்கவர்களாக இளைஞர்கள் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்கின்ற ஓர் உயரிய நோக்குடன் மட்டக்களப்பு ‘ ராமகிருஸ்ண குருகுலப் பழைய மாணவர் மன்றம் நாடளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் நடாத்திய கட்டுரைப் போடடிக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு கல்லடி ‘ ராமகிருஸ்ண மண்டபத்தில் மட்டக்களப்பு ‘ ராமகிருஸ்ண குருகுலப் பழைய மாணவர் மன்றத்தின் தலைவர் க. மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
கீழ் ,மத்தி,மேல் மற்றும் திறந்த பிரிவுகளில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்ட சுமார் 700க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்களுக்கு நற் சான்றிதல் வழங்கிவைக்கப்பட்டதோடு சிறந்த கட்டுரை ஆக்கங்களுக்கு உரியவர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பணப்பரிசில்கள் ,விருதுகள் என்பன பிரதம அதிதி ‘மத் சுவாமி கபாலீசானந்த ஜீ மஹராஜ் மற்றும் கௌரவ அதிதிகளான ‘மத் சுவாமி சதுர்புஜானந்தா ஜீ மஹராஜ், சிவசோகச் செல்வன் த. சாம்பசீவம் ஐயா, ‘ ராமகிருஸ்ண குருகுலப் பழைய மாணவர் மன்ற மூத்த உறுப்பினர்களான பி. சீனித்தம்பி, எஸ். தில்லையம்பலம் ஆகியோரினால் ஆண், பெண் மாணவர்களிடம் வழங்கிவைக்கப்ட்டது.
இங்கு மாணவர்களின் கலை.கலாசார நிகழ்வுகள் இடமபெற்றன. நாடளாவிய ரீதியில் மண்டுர், முறக்கொட்டான்சேனை, பட்டிருப்பு,கல்லடி, பொகவந்தலாவ, மட்டக்களப்பு, யாழ்ப்பானம், வந்தாறுமூலை, செட்டிபாளையம், பலாங்கொடை, கிரான், அரசடி, தொல்புரம், ஓந்தாச்சிமடம், பசறை, கொழும்பு, கடுகண்ணாவ, கோண்டாவில், நாவலப்பிட்டிய, பிட்டரத்மலை பழுகாமம், காயங்கேணி, கிண்ணையடி ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment