
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள் குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள சிகரம் ஜூம்மா பள்ளிவாயளின் புதிய நிருவாகத் தெரிவு கடந்த புதன்கிழமை சிகரம் ஜூம்மா பள்ளிவாயளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் அஷ்ஷேஹ் ஜூனைதீன் நளிமி தலைமையில் இடம்பெற்றது.
புதிய நிர்வாக தெரிவின்படி பள்ளிவாயளின் புதிய நிர்வாக சபைத் தலைவராக எம்.வை.ஆதமும் செயலாளராக எம். எச். எம். தாஹிரும் பொருளாளராக எம். எம். உசனாரும் உப தலைவராக யு. எல். இஸ்மாயிலும் உப செயலாளராக எஸ். எல். அர்சாட்டும் 6 நிருவாக சபை உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிகரம் கிராமத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே ஒரு பள்ளிவாயல் மாத்திரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment